Tuesday, July 21, 2009

காதலியின் வர்ணிப்பு

என்னைப் பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லத் தெரியுமா?""எத்தன வேணும்? சொல்…"

"தெரிஞ்ச வரைக்கும் சொல்லுப் போதும்… எனக்குப் பிடிச்சது கிடைக்குதான்னுப் பார்க்கறேன்"

நடக்கும் பூங்கா
ஒளிரும் இசை
கைவீசும் கவிதை
ஓய்வில்லா ஓவியம்
தென்றலின் தேகம்இதயமுள்ள இரக்கம்
பகல் நிலா
கலவரக் கண்வீச்சு
புன்னகைப் பூங்கொத்து
அன்பின் தாய்
நிலவின் நிலவு
பூக்களின் பொறாமை
இரவின் வெளிச்சம்
சிணுங்கும் சிற்பம்
பேசும் மௌனம்
மழையின் மழலை
இசையின் குரல்
காதலின் காதலி
ஐந்தடி ஹைக்கூ
நடக்கும் நதி
அழகின் அகராதி
கொஞ்சும் கோபம்
கவிதைக் கருவூலம்
"இதுல எது உனக்குப் பிடிச்சிருக்கு?"
"ம்ஹும் ஒன்னும் இல்ல"
"ஒன்னுமே இல்லையா?"
"எனக்கு ரொம்பப் பிடிச்சது ஒன்னே ஒன்னு இருக்கு. ஆனா நீ அத சொல்லல"
"அப்படியா? அப்போ உனக்குப் பிடிச்சத நீயே சொல்லு…"
"உன் காதலி!"

2 comments:

Anonymous said...

kadaisee rendu vari valiyaga ullathu!!!

Unknown said...

Nanum rendu vari solgiren ungalai patri.
Nee kavichen.