Monday, October 12, 2009

1

மாலைப்பொழுது

மேகத்தில் மலைகள் படர்ந்து நிற்பது போல காட்சி தெரிந்தது
அதன் முடிவில் தென்னை மரங்கள் காற்றின் இசைஅறிந்து நடனங்கள் ஆடின
பகலவன் மறைந்தானொ இல்லையொ எனும் பயத்துடன் சந்திரன் மெல்ல வெளிவர
பறவைகள் இங்கும் அங்குமாய் திசைகள் பல நொக்கி பறந்து கொன்டிருந்தன
என்ன வியப்பு நட்சத்திர படையெ இருக்கும் மேகத்தில் ஒரெ ஒரு நட்சத்திரம் மின்னியது
அது ஒரு அழகான மாலைப்பொழுது

Wednesday, July 29, 2009

1

காதல்

பத்து மாதம்
சுமந்து பெற்றவள்
தாய்எனில்
இத்தனை வருடமாய்
உன்னை சும்மந்து
கொண்டு இருக்கும்
என்னை என்னெவென்று
அழைப்பாய்!

1

குழந்தை

கால் வலிக்கும்
வரை.........
உன் வீரல்!
பிடித்து நடக்க
வேண்டும்!
இரண்டு
வயது
குழந்தையாக!...........

0

புன்னகை

ஒரு மழை கால மாலை நேரத்தில்........
நான் குடையுடன் நடக்கையில்.......
நீயோ புன்னகையுடன் மழையில் நடந்தாய்.......
ஹையோ.... மின்னல்........
பிறகு தான் தெரிந்தது மின்னல் மழையினால் அல்ல
உன் புன்னகைய்னால் என்று............
யார் சொன்னது....?
மின்னலில் இருந்து
மின்சாரம் எடுக்க முடியாது என்று......?

0

தவம்

ஆயிரம் துறவிகள் வந்தாலும்.....
என் தவத்திற்கு இடு ஆகாது
அவர்களது தவ வலிமை.....
ஏன் என்றால்......
நான் வரமாய் பெற்றது
உன் அன்பையும்........
உன் விழியோர சிரிப்பையும்......

Monday, July 27, 2009

0

நீ

நனைந்த என் விழிகளை
நாசுக்காக துடைத்துவிட்டு
பூட்டிய என் இதழ்களில்
புன்னகையை மலரவிட்டு
நல்லவற்றை
நையாண்டியாய் எடுத்துரைத்து
நான்கு பக்கம் நான் உண்டு என்று
நம்பிக்கை தரும் உறவாய்
நீ........................

Friday, July 24, 2009

0

யாரடா நீ ?

யாரடா.........நீ என்னக்கு...........?

என் உயிரை களவாடிய
களவான.........?
இல்லை...விழிகளால்
உயிர் தீண்ட வந்த
காதலனா...........?
இல்லை....என் உயரில்
பாதி(பதி)யாக வந்த......
...................?
யாரடா நீ .............?